இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஜோஷ் பேக்கர் திடீர் மரணம்.! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்து நாட்டின் Worcestershire-ன் இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஜோஷ் பேக்கர், கடந்த 2021 ஆம் ஆண்டு தனது கிரிக்கெட் பயணத்தை தொடங்கினார். இதைத் தொடர்ந்து அவர் இந்த சீசனில் இரண்டு கவுண்டி சாம்பியன்ஷிப் போட்டிகளில் மட்டுமே விளையாடினார், இறுதியாக ஏப்ரல் மாதம் கிடர்மின்ஸ்டரில் டர்ஹாமுக்கு எதிராக விளையாடினார். 

இதையடுத்து அவர் வொர்செஸ்டர்ஷையரின் இரண்டாவது XI அணிக்காக மூன்று விக்கெட்டுகளை வீழ்த்திய அடுத்த நாளே மரணமடைந்துள்ளார். இந்தச் செய்தி கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இவரது மரணத்திற்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம், கவுண்டி கிளப்புகள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சமூக வலைதளங்களில் இரங்கல் செய்திகளை வெளியிட்டு வருகின்றனர். 

7 வயதில் வொர்செஸ்டர்ஷையரில் இணைந்த ஜோஷ் பேக்கர், 22 முதல் தர போட்டிகளில் 43 விக்கெட்டுகளையும், 25 வெள்ளை பந்து தோற்றங்களில் 27 விக்கெட்டுகளையும் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

england cricket bowler josh bekkar passed away


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->