ஆஷஸ் 3வது டெஸ்ட் || 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி.!! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று முன்னிலை வகித்து வருகிறது.

இந்த தொடரின் 3வது டெஸ்ட் போட்டி கடந்த ஜூலை 6ம் தேதி தொடங்கிய நிலையில் இதில் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 263 ரன்களும், இங்கிலாந்து 237 ரன்களும் சேர்த்திருந்த நிலையில் 3வது நாளான நேற்று இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 224 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு, 251 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது. 

இதனை அடுத்து 4வது நாளான இன்று களமிறங்கிய இங்கிலாந்து அணி பேட்ஸ்மேன்கள் ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் குவிக்க தொடங்கினர். இருப்பினும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளும் சரிந்தன. 

இங்கிலாந்து அணியின் தரப்பில் ஹேரி ப்ரோக் 75 ரன்களும், ஜாக் கேர்விலி 44 ரன்களும் கிறிஸ் வோக்ஸ் 32 ரன்கள் குவித்த நிலையில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு வெற்றி இதற்கான 251 ரன் எட்டியதால் இங்கிலாந்து அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் ஆஸ்திரேலியா 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் 2-1 என முன்னிலை வகிக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

England won by 3 wickets in Ashes 3rd Test


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->