இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக கௌதம் கம்பீர் நியமனம்! - Seithipunal
Seithipunal


இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக பிசிசிஐ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

டி20 உலக கோப்பை உலகக் கோப்பையை வென்ற கையோடு இந்திய கிரிக்கெட் அணையின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பதிவுக்காலம் நிறைவடைந்துள்ள நிலையில், இந்திய அணியின் புதிய பயிற்சியாளரை தேர்வு செய்யும் பணிகளை பிசிசிஐ மும்மரமாக செய்து வருகிறது.

இதற்கிடையே, ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியின் தற்காலிக பயிற்சியாளராக விவிஎஸ் லக்‌ஷ்மண் செயல்பட்டு கொண்டிருக்கிறார்.

மேலும், இந்த மாத இறுதியில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடருக்கு முன் இந்திய அணியின் தலைமைப் நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

பிசிசிஐ நடத்திய இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பணிக்கான நேர்முகத்தேர்வில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், பாஜக முன்னாள் எம்பியுமான கௌதம் கம்பீர், டபிள்யு.வி ராமன் அளித்த எதிர்கால திட்டம் பிசிசிஐ நிர்வாகிகளை அதிகமாக கவர்ந்து உள்ளதாகவும், இதன் காரணமாக அவர் பயிற்சியாளராக இருவரில் ஒருவர் தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.

இதற்கிடையே, இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக கௌதம் கம்பீரை நியமிக்கப்படுவது உறுதியவிட்டதாகவும், சம்பளம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் சொல்லப்பட்டது.

இந்த நிலையில், இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக கௌதம் கம்பீரை பிசிசிஐ தேர்ந்தெடுத்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Gautam Gambhir appointment as head coach of the Indian cricket team


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->