உலக குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் நிகத் ஜரீன் தங்கம் வென்று வரலாறு படைத்திருப்பது பெருமைக்குரியது! ஜி.கே.வாசன்.!
Gkvasan congratulated boxer nikhat zareen
உலக குத்துச்சண்டைப் போட்டியில் இந்தியாவின் நிகத் ஜரீன் தங்கம் வென்று வரலாறு படைத்திருப்பது பெருமைக்குரியது, புகழுக்குரியது என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,
உலக குத்துச்சண்டைப் போட்டியில் இந்தியாவின் நிகத் ஜரீன் அவர்கள் தங்கம் வென்றிருப்பது பாராட்டுக்குரியது, வாழ்த்துக்குரியது.
துருக்கியில் நடைபெற்ற உலக சீனியர் பெண்கள் குத்துச்சண்டை சாம்பியன்சிப்பில் இந்திய நாட்டின் தெலுங்கானாவைச் சேர்ந்த வீராங்கனை நிகத் ஜரீன் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்திருப்பது மகிழ்ச்சிக்குரியது.
52 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்று ஆரம்பம் முதல் சிறப்பாக விளையாடி அரையிறுதிக்கு முன்னேறி, வெற்றி பெற்று பிறகு இறுதிப்போட்டியிலும் திறமையாக விளையாடி வெற்றி பெற்றிருப்பது தாய்நாட்டின் விளையாட்டிற்கு கிடைத்த வெற்றியாகும்.
இறுதிப்போட்டியில் தாய்லாந்து வீராங்கனை ஜித்போங்கை சிறப்பாக எதிர்கொண்ட நிகாத் ஜரீன் 5-0 என்ற புள்ளி கணக்கில் வெற்றிபெற்றுத் தங்கப்பதக்கத்தைக் கைப்பற்றினார்.
வீராங்கனையின் வெற்றியால் இந்திய நாட்டின் விளையாட்டுக்கும், விளையாட்டு வீரர்களுக்கும் உலக அளவில் பெருமை சேர்ந்திருக்கிறது.
குறிப்பாக பெண்கள் விளையாட்டில் ஈடுபட, ஆர்வம் கொள்ள, போட்டியில் பங்கேற்க நிகத் ஜரீன் அவர்களின் சாதனை ஊக்கமளிக்கிறது.
25 வயதான நிகத் ஜரீன் கடந்த 2019 ஆம் ஆண்டு தாய்லாந்தில் நடந்த ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
சிறு வயது முதல் குத்துச்சண்டைப் போட்டியில் ஆர்வம் கொண்டு தொடர்ந்து விளையாடி, முயற்சிகள் மேற்கொண்டு தற்போது குத்துச்சண்டைப் போட்டியில் வரலாறு படைத்திருப்பது வீராங்கனையின் தன்னம்பிக்கைக்கு கிடைத்திருக்கும் வெற்றியாகும்.
வீராங்கனைக்கு உறுதுணையாக இருந்த பெற்றோர்களுக்கும், பயிற்சியாளர்களுக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
மத்திய மாநில அரசுகள் வீராங்கனையின் விளையாட்டுக்கு அங்கீகாரம் கொடுத்து, பரிசும், பதக்கமும் அளித்து, உதவிகள் செய்து தொடர் விளையாட்டுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.
உலக குத்துச்சண்டையில் தங்கம் வென்றிருக்கும் நிகத் ஜரீன் அவர்கள் தொடர்ந்து பல போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்று, சாதனை படைத்து, புகழ் பெற்று, தாய் நாட்டின் புகழை உலக அரங்கில் மென்மேலும் நிலைநாட்ட வேண்டும் என்று த.மா.கா சார்பில் வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Gkvasan congratulated boxer nikhat zareen