இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இருந்து கிளென் மேக்ஸ்வெல் விலகல்!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் நடைபெற்று வரும் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. அரையிறுதிக்கு யார் தகுதி பெறுவார்கள் என்ற போட்டி நிலவி வருகிறது. இந்தியா விளையாடியுள்ள 6 போட்டிகளில் அனைத்திலும் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெறுவது உறுதியாகியுள்ள நிலையில் மற்ற அணிகளுக்கு இடையே கடுமையான போட்டியில் நிலவி வருகிறது. இந்த சூழலில் கடந்த வாரம் நெதர்லாந்துக்கு எதிராக போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா அணியின் ஆல் ரவுண்டர் மேக்ஸ்வெல் 40 பந்துகளில் சதம் அடித்து உலகக் கோப்பை வரலாற்றில் அதிவேக சதம் என்ற சாதனையை படைத்தார்.

இந்த நிலையில் வரும் சனிக்கிழமை அகமதாபாத்தில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. ஜோஸ் பட்லரின் தலைமையிலான இங்கிலாந்து அணி அரையிறுதி போட்டியிலிருந்து வெளியேறியது. அதே வேளையில் ஆரம்பத்தில் சொதப்பிய ஆஸ்திரேலியா அணி மீண்டும் எழுச்சி பெற்று தொடர்ந்து நான்க வெற்றிகளுக்குப் பிறகு அட்டவணையில் 4வது இடத்தில் உள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றால் ஆஸ்திரேலியா அணி அரையிறுதிக்கு முன்னேறும். ஆனால் இந்த முக்கியமான போட்டியில் மேக்ஸ்வெல் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அகமதாபாத்தில் விடுமுறை நாளில் ஆஸ்திரேலியா அணி கோல்ஃப் விளையாடியபோது மேக்ஸ்வெல்லுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இருந்து விலகியுள்ளார். பெரிய காயம் ஏதும் இல்லை என்றும், அடுத்தடுத்து வரும் போட்டிகளில் அவரால் விளையாட முடியும் என்றும் ஆஸ்திரேலிய அணி தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Glenn Maxwell ruled out against england match


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->