வெந்த புண்ணில் வேலை பாய்ச்சிய சுந்தர் பிச்சை! - Seithipunal
Seithipunal


நேற்று நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியின் இந்தியா பாகிஸ்தானின் ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற்றது. கடைசி ஓவரில் கடைசி வந்து வரை ஆட்டம் நீண்டது. சிறப்பாக விளையாடிய விராட் கோலி இந்திய அணியின் வெற்றி பாதைக்கு கொண்டு சென்றார். இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் காரணமாக கிரிக்கெட் வீரர்களும் பிரபலங்களும் நடிகர்களும் இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில்கூகுள் நிறுவனத்தின் தலைமை நிலை அதிகாரி சுந்தர் பிச்சை தனது ட்விட்டர் பக்கத்தில் தீபாவளி வாழ்த்துடன் இந்திய கிரிக்கெட் அணிக்கு வாழ்த்தும் தெரிவித்து இருந்தார். அந்த வாழ்த்துச் செய்தியில் "இனிய தீபாவளி வாழ்த்துக்கள்! அனைவரும் உங்கள் நண்பர்களுடன் மற்றும் குடும்பத்தினருடன் சிறந்த தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள். நானும் தீபாவளியை கடைசி மூன்று ஓவர்களுடன் கொண்டாடினேன்" என பதிவிட்டிருந்தார்.

அந்தப் பதிவில் பாகிஸ்தானை சேர்ந்த கிரிக்கெட் ரசிகர் ஒருவர் " நீங்கள் முதல் மூன்று ஓவரை பாருங்கள்" என பதில் அளித்து இருந்தார். அதற்கு சுந்தர் பிச்சை "அதையும் செய்தேன். புவனேஷ் மற்றும் ஹர்ஷர்தீபிடம் இருந்து என்ன ஒரு மந்திரமான பந்து வீச்சு" என அவருக்கு பதில் அளித்து இருக்கிறார். இந்த ட்விட்டர் உரையாடல் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடைசி வரை முயற்சி செய்தும் பாகிஸ்தான் அணியால் வெற்றி பெற முடியாத காரணத்தால் பாகிஸ்தான் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். சோகத்தில் உள்ள பாகிஸ்தான் ரசிகரின் கருத்துக்கு சுந்தர் பிச்சை அளித்த பதில் வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல் அமைந்துவிட்டது. இந்த பதிலை பாகிஸ்தான் ரசிகர் எதிர்பார்த்து இருக்க மாட்டார் என்றே தோன்றுகிறது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Google CEO Sundar Pichai reply to Pakistani fan on Twitter


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->