#WPL : பெங்களூர் அணிக்கு இமாலய இலக்கை நிர்ணயித்த குஜராத் அணி.. முதல் வெற்றியை பெறப்போவது யார்?
Gujarat Giants Womens target of 202 runs against Bangalore womens
முதலாவது மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 4ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளை பிரபலப்படுத்த ஐபிஎல் கமிட்டி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த நிலையில் இன்று நடைபெறும் 6வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய குஜராத் ஜெயன்ட்ஸ் அணி ஆரம்ப முதலே அதிரடியாக விளையாடியது. பெங்களூர் அணியின் பந்துவீச்சை மைதானத்தின் நாலாபுரமும் குஜராத் அணி வீரர்கள் சிதறடித்தனர்.
இறுதியாக குஜராத் ஜெயன்ட்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் குவித்துள்ளது. குஜராத் அணியில் சிறப்பாக விளையாடிய ட்ரங்கலே 65 ரன்களும், ஹர்லீன் டியோல் 67 ரன்களும் அடித்தனர்.
அதனைத் தொடர்ந்து 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூர் அணி களமிறங்க உள்ளது. இவ்விரு அணிகளும் இதுவரை விளையாடியுள்ள இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்து கடைசி இரண்டு இடங்களில் உள்ளது. இந்த நிலையில் இந்த தொடரில் எந்த அணி முதல் வெற்றியை பதிவு செய்யும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
English Summary
Gujarat Giants Womens target of 202 runs against Bangalore womens