பாகிஸ்தான் செல்லமாட்டேன்.. அடம்பிடிக்கும் இந்திய நடுவர்!
I will not go to Pakistan. The Indian umpire!
தனிப்பட்ட காரணங்களுக்காக பாகிஸ்தான் பயணிப்பதில்லை என முடிவு செய்திருப்பதாக இந்திய நடுவர் நித்தின் மேனன் ஐ.சி.சி.யிடம் கூறியுள்ளார் அவரது இந்த முடிவை ஐ.சி.சி.யும் ஏற்றுக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .
9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் வருகிற 19-ம் தேதி முதல் மார்ச் 9-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம் அணிகளும், 'பி' பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன. இதையடுத்து பிப்ரவரி 19-ந்தேதி கராச்சியில் தொடங்கும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் அணி, நியூசிலாந்தை சந்திக்கிறது.இதில் முக்கியமாக இந்திய அணிக்குரிய ஆட்டங்களும் , முதலாவது அரையிறுதியும் துபாயில் நடைபெற உள்ளன. பாதுகாப்பு அச்சுறுத்தலால் இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது . மேலும் இந்தியா- பாகிஸ்தான் மோதும் ஆட்டம் பிப்ரவரி 23-ம் தேதி நடைபெறுகிறது.

இந்த நிலையில் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான 15 பேர் கொண்ட நடுவர் குழுவை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஐ.சி.சி.நேற்று அறிவித்தது. இதில் 3 போட்டி நடுவர் மற்றும் 12 களநடுவர்கள் இடம்பிடித்துள்ளனர். அவர்களை நடுவர் குழுவில் இந்தியாவின் முன்னணி நடுவர் நித்தின் மேனன் இடம் பெற வேண்டும் என ஐ.சி.சி. விரும்பியது என தெரிகிறது.
இந்த நிலையில், தனிப்பட்ட காரணங்களுக்காக பாகிஸ்தான் பயணிப்பதில்லை என முடிவு செய்திருப்பதாக நித்தின் மேனன் ஐ.சி.சி.யிடம் கூறியுள்ளார். அவரது இந்த முடிவை ஐ.சி.சி.யும் ஏற்றுக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .
English Summary
I will not go to Pakistan. The Indian umpire!