இடையூறு நாயகனுக்கு இடைக்கால தடை போட்ட ஐசிசி! சென்னை போட்டிக்கு நடுவே நடந்த சுவாரசியம்!
ICC Banned to jarvo in worldcup 2023
கடந்த 2021 ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டிற்கு இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்ட பொழுது, அங்கு நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளின் நடுவே, இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த யூடுயூபர் ஜார்வோ என்பவர், அடிக்கடி வெள்ளை நிற ஜெர்சியை அணிந்து கொண்டு, பேட்டிங் செய்யவும் பந்து வீசவும் மைதானத்திற்கு ஓடி வந்துவிடுவார்.
ஆட்டத்தின் நடுவே ஓடி வந்து ஆட்டத்தினை தடை செய்து விடுவார். அதன் மூலம் அவர் பிரபலமும் அடைந்தார். லார்ட்ஸ் மற்றும் ஹெட்டிங்க்லே மைதானங்களில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் ஆட்டத்தின் இடையே உள்ளே புகுந்து தடை செய்துவிட்டார். இதனை அடுத்து அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டு, ஹெட்டிங்க்லே மைதானத்தில் வாழ்நாள் முழுவதும் நுழையவும் தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் சென்னையில் நடைபெற்ற இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான உலக கோப்பை லீக் போட்டியில், சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வந்த ஜார்வோ, ஜார்வோ 69 என்ற எண் கொண்ட இந்திய ஜெர்சியை அணிந்து கொண்டு, ஆட்டம் நடைபெறும் போது மைதானத்தில் உள்ளே நுழைந்துவிட்டார்.
அவரை பாதுகாப்பு பணியில் இருந்தவர்களும், இந்திய வீரர் விராட் கோலியும் சமாதானம் செய்து வெளியே அனுப்பி வைத்தனர். இதனால் மைதானமே கலகலப்பானத. இதனை அடுத்து சமூக ஊடகங்களில் Jarvo is back எனவும், தலைவா நீங்க இங்கேயும் வந்துட்டீங்களா எனவும் பதிவு செய்தனர்.
இந்த நிலையில் அவரை உலகக்கோப்பை போட்டிகளில் அனுமதிக்க ஐசிசி தடை விதித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதன்மூலம் அவர் உலகக்கோப்பை போட்டிகளை பார்க்க அனுமதிக்கப்படமாட்டார். அவர் தன்னை பிரபலப்படுத்திக்கவே இவ்வாறான செயலில் ஈடுபடுவதாக அவர் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன.
English Summary
ICC Banned to jarvo in worldcup 2023