இலங்கை - பங்களாதேஷ் போட்டி நடக்குமா? பிசிசிஐ, ஐசிசி தீவிர ஆலோசனை!! - Seithipunal
Seithipunal


டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வருவதால் வரும் 10ம் தேதி வரை அனைத்து தொடக்கப் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. டெல்லியில் உள்ள அனைத்து பள்ளிகளும் 6 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு ஆன்லைன் வகுப்புகளை நடத்திக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் காற்றின் தரம் தொடர்ந்து மோசமான நிலையில் நீடித்து வருவதால் பல்வேறு பகுதிகளில் காற்று மாசு அதிகரித்து புகை மூட்டமாக காட்சியளிக்கிறது. 

டெல்லி காற்று மாசு காரணமாக கட்டுமானம் சார்ந்த அனைத்து பணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் நாளை டெல்லி மைதானத்தில் இலங்கை வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற உள்ள உலகக் கோப்பை போட்டிக்கான பயிற்சியை இரு அணிகளும் ரத்து செய்துள்ளது.

இதனால் நாளை டெல்லியில் உலக கோப்பை லீக் போட்டி நடைபெறுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. டெல்லி காற்று மாசு தொடர்பாக நிபுணர்களின் ஆலோசனையை ஐசிசி மற்றும் பிசிசிஐ கேட்டுள்ளது. நாளை போட்டிக்கு முன்பாக வீரர்களின் நலனை கருத்தில் கொண்டு ஆலோசனை நடைபெற்று வருவதாகவும், தகவல் வெளியாகி உள்ளது. நாளை போட்டியை நடத்தலாமா? அல்லது வேறு இடத்திற்கு மாற்றலாமா? என ஆலோசனை நடைபெற்று வருகிறது. இன்று மாலைக்குள் இதுகுறித்தானஅதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ICC BCCI discuss on holding SLvsBan match due to delhi air pollution


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->