ஆன்லைன் பண மோசடி கும்பலிடம் ரூ.20 கோடி வரை இழந்த ஐசிசி...!!
ICC lost Rs20 crore to online money fraud gang
சர்வதேச கிரிக்கெட் வாரியமான ஐ.சி.சி ஆன்லைன் மோசடி கும்பலிடம் ரூ.20 கோடி வரை பணம் இழந்த விவகாரம் சர்ச்சையை கிளப்பி உள்ளது. ஆன்லைன் பண மோசடி கும்பல் போலி மின்னஞ்சல்கள் மூலம் ஐ.சி.சி தரப்பில் வங்கி கணக்கு மற்றும் அதில் பணிபுரியும் அதிகாரிகளிடம் இருந்து சுமார் 20 கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளது.
இது குறித்தான அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்படவில்லை. ஆனால் இதனை விளையாட்டு துறை தொடர்பான செய்திகளை வெளியிடும் இ.எஸ்.பி.என் இணையதளம் மோசடி குறித்த தகவலை வெளியிட்டுள்ளது. இந்த மோசடியில் ஈடுபட்ட கொள்ளையர்கள் யார்..? அவர்கள் எந்த கும்பலை அல்லது தனிநபர்களா..? என்ற விசாரணை நடைபெற்று வருகிறது.
அமெரிக்காவைச் சேர்ந்த எஃப்.பி.ஐ இந்த ஆன்லைன் பண மோசடி குறித்து விசாரணை நடத்தி வருகிறது. ஐ.சி.சி அலுவலகத்தில் வேலை செய்யும் பணியாளர்களே இந்த பண மோசடியில் ஈடுபட்டுள்ளனரா..? என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. ஐ.சி.சியின் வங்கி கணக்கில் இருந்து எந்த முறையில் பணம் பரிவர்த்தனை நடைபெற்றது என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் ஐ.சி.சி அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மோசடியில் ஈடுபட்ட கும்பலோடு தொடர்பில் இருந்தார்களா..? பணப்பரிவர்த்தனை ஒரே முறையில் ஒட்டுமொத்தமாக நடைபெற்றதா அல்லது சிறிது சிறிதாக கொள்ளையடித்தார்களா என்ற கோணத்திலும்..? விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆன்லைன் பண மோசடி கும்பல் ஐ.சி.சியையும் விட்டு வைக்கவில்லையா என இணையதள வாசிகள் கலாய்த்து வருகின்றனர்.
English Summary
ICC lost Rs20 crore to online money fraud gang