ஐ.சி.சி. டெஸ்ட் புதிய தரவரிசை பட்டியல்: முதலிடத்தில் தொடரும் பும்ரா மற்றும் ஜடேஜா..! - Seithipunal
Seithipunal


​சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.), டெஸ்ட் போட்டிகளில் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்தவகையில், டெஸ்ட் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா (908 புள்ளி) முதலிடத்தில் தொடருகிறார். 

ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் 02-வது இடத்திலும் (841 புள்ளி), தென் ஆப்பிரிக்காவின் ககிசோ ரபடா (837 புள்ளி) 03-வது இடத்திலும் உள்ளனர். இதில் பாகிஸ்தான் வீரர் நோமன் அலி 02 இடங்கள் முன்னேறி 09-வது இடத்தை பிடித்துள்ளார். இந்திய வீரரான ஜடேஜா ஒரு இடம் சரிந்து 10-வது இடத்தில் உள்ளார்.

பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் ஜோ ரூட், ஹாரி புரூக், வில்லியம்சன், ஜெய்ஸ்வால், டிராவிஸ் ஹெட் ஆகியோர் மாற்றமின்றி முறையே முதல் 05 இடங்களில் நீடிக்கிறார்கள்.

இந்த வரிசையில் பாகிஸ்தான் வீரர் சாத் ஷகீல் 03 இடங்கள் முன்னேறி  08-வது இடத்தை பிடித்துள்ளார். இந்த வரிசையில் இந்திய வீரரான ரிஷப் பண்ட் ஒரு இடம் சரிந்து 10-வது இடத்தில் உள்ளார்.

அத்துடன், ஆல் ரவுண்டர்கள் வரிசையில் பெரிய அளவில் மாற்றம்; ஏற்படவில்லை. தொடர்ந்தும் இந்திய வீரர் ஜடேஜா முதலிடத்தில் உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ICC Test New Rankings


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->