உலகக் கோப்பை டிக்கெட் விற்பனை எப்போது.? வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் நடைபெற உள்ள ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான கால அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மாற்றி அமைத்து உள்ள நிலையில் டிக்கெட் விற்பனை குறித்தான அறிவிப்போம் தற்பொழுது வெளியாகி உள்ளது.

இந்தியாவில் வரும் அக்டோபர் 5ஆம் தேதி முதல் நவம்பர் 19ஆம் தேதி வரை ஒரு நாள் கிரிக்கெட் உலக கோப்பை தொடர் நடைபெற உள்ளது. ஹைதராபாத், அகமதாபாத், தர்மசாலா, டெல்லி சென்னை, லக்னோ, பூனே, பெங்களூர், மும்பை, கொல்கத்தா ஆகிய 10 மைதானங்களில் மொத்தம் 46 நாட்களுக்கு 48 போட்டிகள் நடைபெற உள்ளது.

அதன்படி கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்த உலகக் கோப்பை தொடர்கான டிக்கெட் விற்பனை தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.வரும் ஆகஸ்ட் 15ம் தேதி ஐசிசி இணையதளத்தில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்குகிறது. முன்பதிவு செய்தவர்களுக்கு ஆகஸ்ட் 25 முதல் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் கிடைக்கும். 

மேலும் டிக்கெட் விற்பனைக்கு கால அட்டவணைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி,

ஆகஸ்ட் 25 - இந்தியா பங்கு பெறாத அனைத்து பயிற்சி ஆட்டங்களுக்கான டிக்கெட் விற்பனை செய்யப்படும்.

ஆகஸ்ட் 30 - கவுகாத்தி மற்றும் திருவனந்தபுரம் மைதானங்களில் இந்திய அணி விளையாடும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை செய்யப்படும்.

ஆகஸ்ட் 31 - சென்னை, டெல்லி, புனே ஆகிய மைதானங்களில் இந்திய அணி விளையாடும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை செய்யப்படும்.

செப்டம்பர் 1 - தர்மசாலா, லக்னோ, மும்பை ஆகிய மைதானங்களில் இந்திய அணி விளையாடும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை செய்யப்படும்.

செப்டம்பர் 2 - பெங்களூரு மற்றும் கொல்கத்தா மைதானங்களில் இந்திய அணி விளையாடும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை செய்யப்படும்

செப்டம்பர் 3 - இந்தியாவே எதிர்பார்க்கும் அகமதாபாத்தில் நடைபெற உள்ள இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போட்டிக்கான டிக்கெட் விற்பனை செய்யப்படும்.

செப்டம்பர் 15 - உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ICC WorldCup cricket series ticket sale date notification


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->