இந்தியா-பாகிஸ்தான் போட்டியை தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
IND vs PAK match starts the Chief Minister Stalin
சென்னையில் இன்று இரவு 8.30 மணிக்கு நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானுடன் மோதுகிறது. இந்த போட்டியை முதல்வர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ண மைதானத்தில் 7 ஆவது ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெற்று வருகிறது.
6அணிகள் கலந்து கொண்ட இந்த தொடரில் இந்தியா, மலேசியா ஆகிய அணிகள் அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. இந்தியா 4ஆட்டங்களில் விளையாடி 3ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளது.
இந்தியா ஒரு டிராவுடன் 10 புள்ளிகள் உடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அரை இறுதிச்சுற்றுக்கு இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே தகுதி பெற முடியும் என்ற நெருக்கடியில் களம் இறங்குகிறது பாகிஸ்தான் அணி.
இந்த சூழலில் இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியை முதல்வர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
இந்திய அணி உலக தரவரிசையில் 4 ஆவது இடத்திலும் பாகிஸ்தான் அணி 11 வது இடத்திலும் உள்ளது. இருப்பினும், இந்த போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
IND vs PAK match starts the Chief Minister Stalin