கேஎல் ராகுல் அசத்தல் செஞ்சுரி! ஆல்-அவுட்டான இந்திய அணி! சம்பவத்தை தொடங்கிய சிராஜ்!  - Seithipunal
Seithipunal


தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் (பாக்சிங் டே மேட்ச்) முதல் நாள் ஆட்டத்தில் 8 விக்கெட்களை இழந்த இந்திய அணி, இன்று இரண்டாவது நாளில் 245 ரன்னுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. பொறுப்புடன் ஆடிய கே.எல்.ராகுல் 101 ரன்கள் எடுத்தார்.

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடியது. 

நேற்று இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தொடங்கியுள்ளது. செஞ்சுரியன் சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் நடக்கும் இந்த ஆட்டத்தில் டாஸை வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச முடிவு செய்தது.

அதன்படி, இந்திய அணிக்காக கேப்டன் ரோகித் சர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர்.

தென்னாபிரிக்க அணியின் பந்துவீச்சை சமாளிக்க மூடியதால் கேப்டன் ரோகித் 4 ரன்களிலும், ஜெய்ஸ்வால் 17 ரன்களிலும், கில் 2 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.

நிதானமாக ஆடிய ஸ்ரேயஸ் ஐயர் 31 ரன்னுக்கும், விராட் கோலி 38 ரன்னுக்கும் ஆட்டமிழக்க இந்திய அணி 200 ரன்களை தொடுமா என்ற கேள்வி எழுந்தது.

மறுமுனையில் பொறுப்பாக ஆடிய கே.எல்.ராகுல் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 105 பந்துகளை எதிர்கொண்ட அவர் 70 ரன்கள் எடுத்து இருந்தார். இந்திய அணி 59 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்து இருந்தது.

இந்நிலையில், இன்று இரண்டாவது நாள் ஆட்டத்தில் இந்திய அனைத்து விக்கெட்களையும் இழந்து 245 ரன்கள் எடுத்து. கேஎல் ராகுல் 101 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தென் ஆப்பிரிக்க அணி சார்பில் ரபாடா 5 விக்கெட்களை கைப்பற்றினார்.

இதனையடுத்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியுள்ள தென்னாபிரிக்க அணி தற்போதுவரை ஒரு விக்கெட்டுக்கு 49 ரன்களை சேர்த்துள்ளது. முகமது எய்டன் மார்க்கரன் விக்கெட்டை முகமது சிராஜ் கைப்பற்றியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IND VS SA boxing day test match 2023 INDIA 1st innings


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->