#INDvsWI || இந்திய அணிக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கு.! டேபியு பிஷ்னோய்-ன் அசத்தல் விக்கெட்.! - Seithipunal
Seithipunal


இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையிலான 20 ஓவர் போட்டி இன்று தொடங்கியுள்ளது. 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரின் முதல் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் தற்போது நடந்து கொண்டிருக்கிறது.

இதில்,  டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச முடிவு செய்தது. இன்றைய போட்டியில் இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய் (டேபியு) அறிமுகம் செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் மையர்ஸ் 4 ரன்னுக்கு தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

அதேசமயத்தில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய நிக்கோலஸ் பூரன், 43 பந்துகளில், 4 பவுண்டரி, 5 சிக்சருடன் 61 ரன்கள் சேர்ந்தபோது, ஹர்ஷல் பட்டேல் பந்துவீச்சில் தனது விக்கெட்டை இழந்தார்.

இந்திய அணியில் இன்று அறிமுகப்படுத்தப்பட்ட ரவி பிஷ்னோய் அசத்தலாக பந்துவீசி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

போலார்டு இந்த முறை தனது விக்கெட்டை பறிகொடுக்காமல் 24 ரன்களை வரை சேர்த்தார். அதில் ஒரு சிக்சரும், இரண்டு பவுண்டரிகளும் அடங்கும். 

இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில், 7 விக்கெட்டுகளை இழந்து, 157 ரன்களை சேர்த்துள்ளது.

இந்திய பந்துவீச்சை பொறுத்தவரை ஹர்ஷல் பட்டேல், ரவி பிஷ்னோய் (டேபியு) தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர். புவனேஷ் குமார், தீபக் சாஹர், சாஹால் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்

இந்திய அணி 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கி ஆட உள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ind vs wi 1st t20 match 2022


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->