சேப்பாக்கத்தில் இந்தியா - வங்காளதேசம் டெஸ்ட் போட்டி!...நாளை டிக்கெட் விற்பனை தொடக்கம்! - Seithipunal
Seithipunal


இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்காளதேச கிரிக்கெட் அணி, 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. 

இதில், முதலில் டெஸ்ட் தொடர் நடைபெறும் நிலையில்,  இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நாளை சென்னை சேப்பாக்கத்தில் தொடங்குகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு உள்ளனர். 

இந்நிலையில், இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை காலை 7 மணிக்கு தொடங்கும் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.இது தொடர்பாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், டெஸ்ட் போட்டி நடைபெறும் 5 நாட்களுக்கும் அன்றைக்கு காலை 7 மணிக்கு டிக்கெட் விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும்,ரூ.200, ரூ.400 ,ரூ.1000 என 3 பிரிவுகளில் டிக்கெட் விற்பனை செய்யப்படும் என்றும், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. 

 

 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India Bangladesh Test match at Chepauk Ticket sales start tomorrow


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->