ஜப்பானை வீழ்த்திய இந்தியா...மும்தாஜ் கான், சாக்ஷி ராணா அபாரம்! - Seithipunal
Seithipunal



இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, ஜப்பானை எதிர்கொண்டது.இதில் ந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்திய அணி சார்பில் மும்தாஜ் கான், சாக்ஷி ராணா மற்றும் திபீகா ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். 

9-வது (21 வயதுக்குட்பட்டோர்)  பெண்கள் ஜூனியர் ஆசிய கோப்பை ஆக்கி போட்டிஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின. லீக் சுற்று முடிவில் 'ஏ' பிரிவில் சீனா (4 வெற்றியுடன் 12 புள்ளி) முதலிடமும், இந்தியா (3 வெற்றி, ஒரு தோல்வியுடன் 9 புள்ளி) 2-வது இடமும், 'பி' பிரிவில் ஜப்பான் (12 புள்ளி) முதலிடமும், தென் கொரியா (9 புள்ளி) 2-வது இடமும் பிடித்து அரைஇறுதிக்கு முன்னேறின.

இதில் இன்று நடைபெற்ற முதலாவது அரையிறுதியில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, ஜப்பானை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்திய அணி சார்பில் மும்தாஜ் கான், சாக்ஷி ராணா மற்றும் திபீகா ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். ஜப்பான் அணி சார்பில் நிகோ ஒரு கோல் அடித்தார்.

மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான சீனா - தென் கொரியா அணிகள் மோதி வருகின்றன. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டியில் இந்தியாவுடன் மோதும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India beat Japan Mumtaz Khan and Sakshi Rana


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->