இலங்கை அணிக்கு எதிராண பகல் இரவு டெஸ்ட்! அபார வெற்றி பெற்ற இந்தியா தொடரையும் கைப்பற்றியது.! - Seithipunal
Seithipunal


இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.

இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெங்களூரு நகரில் பகல் இரவு ஆட்டமாக நடைபெற்று வந்தது. இதில் முதல் இன்னிங்ஸில் இந்தியா 252 ரன்களும் இலங்கை 109 ரன்களும் எடுத்தன. இந்திய அணி தரப்பில் ஸ்ரேயாஸ் ஐயர் 92 ரன்களும் ரிஷப் பண்ட் 39 ரன்களும் எடுத்தனர். இலங்கை அணி தரப்பில் மேத்திவ்ஸ் 43 ரன்கள் எடுத்தார்.

பின்னர் 143 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 9 விக்கட்டுகளை இழந்து 303 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. ஸ்ரேயாஸ் ஐயர் 67 ரன்களும், அதிரடியாக ஆடிய ரிஷப் பண்ட் 50 ரன்களும் ரோஹித் 46 ரன்களும் எடுத்தனர். 

பின்னர் 447 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி இலங்கை அணி பேட்டிங்கை தொடங்கியது. கேப்டன் கருனாரத்னே 107 ரன்களும், குஷல் மெண்டிஸ் 54 ரன்களும் எடுக்க, இலங்கை அணி 208 ரன்களில் ஆட்டமிழக்க இந்திய அணி 238 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்து, தொடரை 2-0 என கைப்பற்றியது.

முதல் இன்னிங்ஸில் 5 விக்கட்டுகளை வீழ்த்திய ஜஸ்பிரித் பும்ரா, இரண்டாவது இன்னிங்ஸில், 3 விக்கட்டுகளை வீழ்த்தினார். அஷ்வின் முதல் இன்னிங்ஸில் 2 விக்கட்டுகளையும் இரண்டாவது இன்னிங்ஸில் 4 நான்கு விக்கட்டுகளையும் வீழ்த்தினார். 

ஸ்ரேயாஸ் ஐயர் ஆட்ட நாயகனாகவும், ரிஷப் பண்ட் தொடர் நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India beat Sri Lanka in Test cricket


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->