வாழ்த்து மழையில் இந்திய அணி, பிரதமர் மோடி வெளியிட்ட வீடியோ !! - Seithipunal
Seithipunal


வரலாற்று சாதனையாக 17 ஆண்டுகளுக்குப் பிறகு கேப்டன் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி மீண்டும் டி20 உலகக் கோப்பையை கைப்பற்றி உள்ளது. கடந்த 17 ஆண்டுகளாக வெல்ல முடியாத இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வென்றதன் மூலம் கிரிக்கெட் ரசிகர்களின் இதயங்களை இந்திய அணி வென்றுள்ளது. 

நேற்று நடந்த T20 இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை வெறும் 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது. முதலில் களம் இறங்கிய இந்திய அணி மொத்தம் 7 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் குவித்தது, அடுத்து களம் இறங்கிய தென்னாப்பிரிக்க அணியால் 8 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 

இந்திய அணி வெற்றி பெற்றதை அடுத்து, சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மட்டுமில்லாமல் தலைவர்களின் வாழ்த்துக்களும் குவிந்த வண்ணம் உள்ளன. அனைவரும் சமூக வலைதளங்களில் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். ஒருபோதும் இறங்காத மனப்பான்மையுடன், அணி கடினமான சூழ்நிலைகளை சமாளித்தது மற்றும் போட்டி முழுவதும் சிறந்த திறமையை வெளிப்படுத்தியது. இறுதிப் போட்டியில் இது ஒரு அசாதாரண வெற்றியாகும். நல்லது, இந்திய அணி! நாங்கள் உங்களால் பெருமை அடைகிறோம்!! என வெற்றி பெற்ற இந்திய அணிக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தனது X பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி ஒரு காணொளி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். மகத்தான வெற்றியைப் பெற்ற இந்திய அணிக்கு முழு நாட்டின் சார்பாக வாழ்த்துகள் என்று கூறினார். இன்று 140 கோடி நாட்டு மக்கள் உங்களின் சிறப்பான செயல்பாட்டால் பெருமிதம் கொள்கின்றனர் என்றார். 

மேலும், நீங்கள் விளையாட்டுத் துறையில் உலகக் கோப்பையை வென்றீர்கள், ஆனால் இந்தியாவின் ஒவ்வொரு கிராமத்திலும் தெருவிலும் உள்ள கோடிக்கணக்கான மக்களின் இதயங்களை வென்றீர்கள். இந்த போட்டி ஒரு சிறப்பு காரணத்திற்காகவும் நினைவில் வைக்கப்படும். பல நாடுகள், பல அணிகள், ஒரு போட்டியில் கூட தோல்வி அடையாதது சிறிய சாதனை அல்ல என பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.

டி20 உலகக் கோப்பையை தட்டி பறித்த இந்திய அணிக்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த அற்புதமான வெற்றிக்காக ஒட்டுமொத்த அணிக்கும் வாழ்த்து தெரிவித்த ராகுல் காந்தி, ரோஹித் சர்மாவின் தலைமை, பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் வழிகாட்டுதல் மற்றும் சூர்ய குமார் யாதவின் கேட்ச் ஆகியவற்றையும் புகழ்ந்து தள்ளினார்.

இதுமட்டுமில்லாமல் மேலும், மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணிக்கு இது என்ன நம்பமுடியாத வெற்றி மற்றும் சாதனை என்று ராஜ்நாத் சிங் தெரிவித்தார். டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி வரலாறு படைத்துள்ளது. 

டி20 கிரிக்கெட் உலகக் கோப்பையை இந்தியா வென்றதால் நாடு முழுவதும் உற்சாகமாக உள்ளது. கிரிக்கெட் திறமை, பொறுமை மற்றும் விடாமுயற்சி ஆகியவற்றின் சிறந்த வெளிப்பாட்டிற்காக இந்திய கிரிக்கெட் அணிக்கு வாழ்த்துக்கள். இன்றைய வெற்றி பல வளரும் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் வீரர்களுக்கு உத்வேகம் அளிக்கும். இந்திய அணிக்காக நாங்கள் பெருமைப்படுகிறோம் என பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

T20 உலக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்த காங்கிரஸ் கட்சி, இந்திய கிரிக்கெட் அணி சிறப்பாக செயல்பட்டு தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி டி20 உலகக் கோப்பையை வென்றுள்ளது. இந்திய அணிக்காக நாடு முழுவதும் பெருமை கொள்கிறது. ஒவ்வொரு வீரரும் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர். ஜெய் ஹிந்த் என தனது ட்விட்டர் பதிவில் ஒரு இடுகையில் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India in congratulatory shower video released by Prime Minister Modi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->