அரையிறுதிக்கு இன்னும் ஒரு படி தூரத்தில் உள்ள இந்திய அணி !!
india is one step behind to the semi final
T20யில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் தங்களின் கடைசி சூப்பர் 8 ஆட்டத்தில் விளையாட இன்று நேருக்கு நேர் மோத உள்ளது. இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு செயின்ட் லூசியாவில் உள்ள கிராஸ் ஐலெட்டில் உள்ள டேரன் சமி தேசிய கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறும்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளின் அரையிறுதிப் பாதையை இந்தப் போட்டி தீர்மானிக்கும். தற்போது உள்ள புள்ளிகள் பட்டியலில் இந்திய அணி நான்கு புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. மேலும் ஆஸ்திரேலிய அணி இரண்டு புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
இன்று நடைபெற உள்ள இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் நேரடியாக அரையிறுதிக்கு முன்னேறும். ஒருவேளை இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றால் நான்கு புள்ளிகளுடன் முதலிடத்துக்கு வரும், அதன் பிறகு வங்கதேசம் ஆப்கானிஸ்தானை வீழ்த்தினால் ஆஸ்திரேலியா அணி அரையிறுதிக்கு முன்னேறும்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இதுவரை T20 போட்டியில் 21 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அந்த போட்டிகளில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை 19 முறை தோற்கடித்தது மற்றும் ஆஸ்திரேலிய அணி 11 போட்டிகளில் வென்றது. மேலும், ஒரு போட்டியும் ரத்து செய்யப்பட்டது. டி20யின் புள்ளிவிவரங்களில், இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் ஐந்து முறை நேருக்கு நேர் மோதியாது. இதில் இந்திய அணி மூன்று போட்டிகளிலும், ஆஸ்திரேலியா இரண்டு போட்டிகளிலும் வெற்றியை சந்தித்தது.
இன்று நடக்க உள்ள இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இன்றைய சூப்பர்-8 ஆட்டத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான போட்டி ரத்து செய்யப்பட்டால், இந்த இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி கிடைக்கும்.
ஒருவேளை அப்படி நடந்தால் இந்திய அணி ஐந்து புள்ளிகளுடன் நேரடியாக அரையிறுதிக்கு செல்லும் வைப்பு உள்ளது. மேலும் அணிக்கு மூன்று புள்ளிகள் இருக்கும். பிறகு, வங்கதேசம் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேற வேண்டும். இல்லையெனில், ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றால், இந்தியாவுடன் சேர்ந்து அரையிறுதிக்கு முன்னேறும்.
இந்திய வீரர்கள் ரோகித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், சிவம் துபே, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா.
ஆஸ்திரேலிய வீரர்கள் டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ் (கேப்டன்), கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், டிம் டேவிட், மேத்யூ வேட் (விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசில்வுட்.
English Summary
india is one step behind to the semi final