இன்று இந்தியா - பாகிஸ்தான் மோதல்!!! வெற்றி யாருக்கு?
India Pakistan clash today Who will win
சாம்பியன்ஸ் டிராபி, 9-வது ஐ.சி.சி கிரிக்கெட் தொடர்கள் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் உள்ள 8 அணிகள் இரண்டு பிரிவாகப் பிரிக்கப் பட்டுள்ளது. இதில் "A" பிரிவில் இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், வங்காளதேசம் அணிகளும் "B" பிரிவில் தென் ஆப்பிரிக்கா ,ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து அணிகளும் இடம் பெற்றுள்ளன. இந்தத் தொடரின் 5-வது லீக் போட்டி இன்று துபாயில் நடைபெறுகிறது. இதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இந்திய அணி:
மேலும் இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா இந்தத் தொடரின் முதல் போட்டியில், வங்காளதேசம் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிப் பெற்றது. அதே உற்சாகத்தோடு பாகிஸ்தான் அணியை வீழ்த்தி அறையிருதி சுற்றுக்கு நுழைய பெரும் முனைப்பில் இந்திய அணி உள்ளது. மேலும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஐ.சி.சி நடத்தும் தொடர்களில் மட்டுமே விளையாடி வருகின்றன. அதைத்தொடர்ந்து கடைசியாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் 2023 உலகக்கோப்பைத் தொடரில் மோதி வெற்றிப் பெற்று அசத்தியது. இதைத் தவிரக் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தானை எதிர்கொண்ட இந்திய அணி அந்தப் போட்டியிலும் வெற்றி அடைந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதல்:
அதுமட்டுமின்றி எப்போதுமே இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதும் போட்டிகளுக்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு இருக்கும். அந்த வரிசையில் சாம்பியன் டிராபி தொடரில் இன்று நடைபெறும் இந்தியா பாகிஸ்தான் அணிகள் இடையிலான போட்டி ரசிகர்களுக்குப் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தப் போட்டியானது இன்று பிற்பகல் 2:30 மணிக்குத் தொடங்க உள்ளது.
English Summary
India Pakistan clash today Who will win