அதிகரிக்கும் கொரோனா..இந்தியா-வெஸ்ட் இண்டிஸ் தொடரில் மாற்றம்-பிசிசிஐ
India vs West Indies series stadium change
தற்போது இந்திய அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் தென் ஆப்ரிக்கா வென்றுள்ளது.
அதனைத் தொடர்ந்து இந்தியா, தென்ஆப்பிரிக்க அணிகளுக்கிடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில், தென் ஆப்பிரிக்க அணி முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது. மேலும், கடைசி ஒருநாள் போட்டி இன்று மதியம் 2 மணிக்கு ஆரம்பமாகிறது.
அதனைத்தொடர்ந்து, வெஸ்ட் இண்டீஸ் அணி அடுத்த மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. தென்னாப்பிரிக்கா தொடரை முடித்து தாயகம் திரும்பும் இந்திய அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
இந்த நிலையில், இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரிப்பால், பாதுகாப்பு நடவடிக்கையாக, முதலில் அறிவிக்கப்பட்டபடி தொடரை 6 மைதானங்களுக்கு பதிலாக 2 மைதானங்களில் மட்டுமே நடத்துவது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
அதாவது, மூன்று ஒருநாள் போட்டிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்திலும், மூன்று டி20 போட்டிகள் கொல்கத்தாவின் ஈடன் கார்டனிலும் நடைபெறும். மேலும், அடுத்த மாதம் 6ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை இந்த போட்டிகள் நடைபெறும் என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது. மேலும் பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
English Summary
India vs West Indies series stadium change