முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா - ஜிம்பாப்வே அணிகள் இன்று பலப்பரீட்சை.! - Seithipunal
Seithipunal


இந்தியா - ஜிம்பாபே அணிகள் இன்று முதல் ஒருநாள் போட்டியில் மோதுகின்றது.

ஜிம்பாப்வே நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.இந்த தொடரில் இந்திய அணியின் கேப்டனாக ஷிகர் தவான் முதலில் அறிவிக்கப்பட்ட நிலையில், கடைசி கட்டத்தில் கே.எல் ராகுல் கேப்டன் ஆக செயல்படுவார் வேண்டும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்த நிலையில் முதல் போட்டி ஹராரேயில் இன்று இந்திய நேரப்படி பிற்பகல் 12 : 45 மணிக்கு நடைபெறுகிறது.. இந்த இரண்டு அணிகளும் கடைசியாக மோதி கொண்ட 5 ஒரு நாள் போட்டியிலும் இந்தியாவே வெற்றி பெற்றுள்ளது. கிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்குப் பின் 2 அணிகளும் ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் மோத உள்ளது.

காயம் காரணமாக கடந்த சில தொடர்களை விளையாடாமல் இருந்த கே எல் ராகுல் நீண்ட இடைவெளிக்குப்பின் இந்த போட்டியில் கேப்டனாக களம் இறங்குகிறார்.

ரோகித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பண்ட், பும்ரா உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு இந்த தொடரில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இதில் சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் ஆகியோரில் ஒருவர் விக்கெட் கீப்பராக இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. காயம் காரணமாக வாஷிங்டன் சுந்தர் அணியிலிருந்து விலகி உள்ள நிலையில் அவருக்கு பதிலாக சபாஷ் அகமது அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணி:

கே.எல்.ராகுல் (கேப்டன்), ஷிகர் தவான் (துணை கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், ஷுப்மான் கில், ராகுல் திரிபாதி, தீபக் ஹூடா, ஷாபாஸ் அகமது, அக்சர் படேல், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், அவேஷ் கான், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ், தீபக் சாஹர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India vs Zimbabwe 1st Odi today


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->