இந்தியா - ஆஸ்திரேலியா மகளிர் டி20 தொடர்.. இந்திய அணி அசத்தல் பேட்டிங்.. 173 ரன்கள் இலக்கு.! - Seithipunal
Seithipunal


ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 173 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது இந்திய மகளிர் அணி.

இந்தியாவில்  சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய மகளிர் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.

அந்த வகையில் இன்று இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பௌலிங் தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 20 அவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணியில் சிறப்பாக விளையாடிய ரிச்சா கோஷ் 20 பந்துகளில் 36 ரன்களும், தீப்தி ஷர்மா 15 பந்துகளில் 36 ரன்கள் எடுத்தனர்.

அதனைத்தொடர்ந்து 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா மகளிர் அணி களம் இறங்க உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India womens target of 173 runs against australia


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->