இந்தியா - ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட் போட்டி.. அஸ்வின் அபார பந்துவீச்சு.. இந்தியா அபார வெற்றி.!
India won by innings and 132 runs against australia
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
இதில், இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று ( பிப்ரவரி 9 - 13) நாக்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 10 விக்கெட்டுகளையும் இழந்து 177 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் பந்து வீசிய ஜடேஜா 5 விக்கெட்களும், ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்களும், ஷமி மற்றும் சிராஜ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
அதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 77 ரன்கள் எடுத்திருந்தது. அதனைத் தொடர்ந்து நேற்று 2ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 321 ரன்கள் எடுத்துள்ளது.
இந்த நிலையில் இன்று மூன்றாம் நாள் நடைபெற்று வருகிறது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 400 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியுள்ளது. இதன்மூலம் இந்திய அணி முதல் இன்னிங்சில் 223 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
இந்திய அணியில் சிறப்பாக விளையாடிய ரோஹித் சர்மா 120 ரன்களும், அக்சர் படேல் 84 ரன்களும், ஜடேஜா 70 ரன்களும், முகமது ஷமி 37 ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலிய அணியில் அறிமுக வீரராக களமிறங்கிய டாட் மர்பி 7 விக்கெட் வீழ்த்தினார்.
அதனைத் தொடர்ந்து 2வது இன்னிங்ஸில் தொடங்கிய ஆஸ்திரேலியா அணி ஆரம்பம் முதலே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. 91 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணியில் சிறப்பாக பந்து வீசிய அஸ்வின் 5 விக்கெட்களும், ஜடேஜா மற்றும் முகமது ஷமி தலா 2 விக்கெட்களும் வீழ்த்தினர்.
இதன் மூலம் இந்திய அணி 132 ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. இதனையடுத்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
English Summary
India won by innings and 132 runs against australia