ஆணவம் வேண்டாம் CM ஸ்டாலின்! 2026 யாருக்கு இல்லாமல் போகப் போகிறது என்பதை உணர்த்தும்... தமிழிசை கடும் கண்டனம்! - Seithipunal
Seithipunal


முன்னாள் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தராஜன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "மரியாதைக்குரிய முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களே மக்கள் நலனில் அக்கறை கொண்டு எந்தக் கட்சித் தலைவர் கருத்து சொன்னாலும் அதை மதிக்க வேண்டும் என்பது ஜனநாயகம்.

மக்களுக்காக கருத்து சொன்னால், அவர்கள் வேலை இல்லாமல் தான் கருத்து சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் என்றால், நீங்கள் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும்பொழுது சொன்ன கருத்துக்கள் எல்லாம் மக்களுக்காக இல்லாமல்ல் வேலையில்லாமல்  இருந்து கொண்டு சொன்ன கருத்துக்கள் தானா... 

ஆட்சியில் இருக்கிறோம் என்று ஆணவம் வேண்டாம்... அதுவும் பாமக நிறுவனர் பெரியவர் மருத்துவர் இராமதாஸ் போன்ற அனுபவமிக்க தலைவர்களின் கருத்தை வழிகாட்டுதலாக எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர, பழி சொல்வதாக எடுத்துக் கூடாது என்பதை அரசியல் அனுபவம் மிக்க உங்களுக்கு நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை..  

மக்களுக்காக இதை சொல்கிறேனே தவிர, எனக்கும் வேலை வேலையில்லாமல் இதை சொல்லவில்லை.. தமிழகத்திற்கு வேலை செய்ய வேண்டும் என்று தான் மற்ற மாநிலங்களில் எனக்கு இருந்த வேலையை விட்டுவிட்டு இங்கே வந்திருக்கிறேன்... 

2026 யாருக்கு வேலை இருக்கப் போகிறது, யாருக்கு வேலை இல்லாமல் போகப் போகிறது என்பதை உணர்த்தும்... யாருக்கும் நிரந்தரமாக வேலை இருக்கப் போவதில்லை, யாரும் நிரந்தரமாக வேலை இல்லாமல் இருக்கப் போவதில்லை..." என்று பதிலடி கொடுத்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP Tamilisai Condemn to DMK CM MK Stalin


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->