2-வது டெஸ்டில் தென்னாப்பிரிக்காவுக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா?
India would beat South Africa in the second test
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கேப்டவுனில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கவுள்ளது.
இரண்டு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் செஞ்சுரியனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 1-0 என அந்த அணி முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் கடைசி டெஸ்ட் போட்டி நியூலேண்ட்ஸ் மைதானத்தில் இரு அணிகளும் மோதவுள்ளன .முதல் போட்டியில் இந்திய அணி போராட்டமான ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் தென்னாப்பிரிக்காவிடம் சரணடைந்தது. முதல் இன்னிங்ஸில் கே.எல்.ராகுலும், 2-வது இன்னிங்ஸில் விராட் கோலி மட்டுமே நிலைத்து ஆடினர்.
தென்னாப்பிரிக்காவின் அசுரத்தனமான வேகப்பந்துவீச்சை இந்திய பேட்ஸ்மேன்களால் சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். மேலும், இந்திய அணியின் பந்து வீச்சு பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது.
இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற தவறினாலும் அல்லது ஆட்டத்தை டிரா செய்தாலும் தொடரை இழந்துவிடும். மேலும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலிலும் பின்னடைவை சந்திக்கும். ரவீந்திர ஜடேஜா காயத்தில் இருந்து குணமடைந்துள்ளதால் அவர் களமிறங்கக்கூடும்.
முதல் போட்டியில் தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் இந்திய அணி நம்பிக்கையுடன் களம் இறங்குகிறது.
English Summary
India would beat South Africa in the second test