இந்திய மகளிர் கூடைப்பந்தின் தாய்... இளம் வயது கேப்டனாக வலம் வந்தவர்... யார் இவர்?
Indian basketball player Anitha paulthurai
இந்திய மகளிர் தேசிய கூடைப்பந்தாட்ட வீரரான அனிதா பால்துரை. இளம் வயது கேப்டனாக வலம் வந்த பெருமைக்குரியவர். சாம்பியன்ஷிப் போட்டிகளில் விளையாடிய முதல் இந்தியப் பெண்மணி. தமிழ்நாட்டின் கூடைப்பந்தாட்ட வீராங்கனை. சுமார் 13 ஆண்டுகள் இந்திய கூடைப்பந்து அணியின் கேப்டனாக இருந்தவர்.
பிறப்பு:
அனிதா பால்துரை 1985ஆம் ஆண்டு ஜூன் 22ஆம் தேதி சென்னையில் பிறந்தார். அனிதா பால்துரை, தனது 11வது வயதில் கூடைப்பந்து விளையாடத் தொடங்கினார்.
பள்ளியில் படிக்கும்போது, கூடைப்பந்து பயிற்சியாளர் இந்த விளையாட்டை முயற்சி செய்துபார் என கூறியதால் கூடைப்பந்தாட்டத்தை விளையாடினார்.
குடும்பம்:
அனிதா பால்துரையின் சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள யாக்கோப்புரம் என்ற கிராமம். அப்பா பால்துரை, தமிழ்நாடு காவல்துறை தலைமைக் காவலராக பணியாற்றியவர்.
அனிதாவின் கணவர் பெயர் கார்த்திக் பிரபாகரன். இந்த தம்பதிக்கு வர்ஷன், லக்ஷனா என்ற இரு குழந்தைகள் இருக்கிறார்கள்.
சாதனைகள்:
அனிதா எட்டு ஆசிய கூடைப்பந்து கூட்டமைப்பு (ஏபிசி) சாம்பியன்ஷிப் போட்டிகளில் விளையாடிய முதல் இந்தியப் பெண்மணி ஆவார்.
ஆசிய சாம்பியன்ஷிப், காமன்வெல்த் போட்டிகள் (2006), ஆசிய விளையாட்டுகள் (2010) போன்ற மிக முக்கிய போட்டிகளில் தலைமையேற்று, பல வெற்றிகளை தேடி கொடுத்தார்.
தேசிய கூடைப்பந்து சாம்பியன்ஷிப்பில் 30 பதக்கங்கள் கைப்பற்றி சாதனை படைத்திருக்கிறார்.
2013ஆம் ஆண்டு, உலகின் மிகச்சிறந்த பத்து வீராங்கனைகளில் ஒருவராக தேர்வாகி அசத்தினார்.
பதக்கங்கள்:
2009ஆம் ஆண்டு வியட்நாமில் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று வெள்ளிப்பதக்கம் பெற்றார்.
2011ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற தெற்காசிய கடற்கரை ஆட்டங்களில் அணியின் தலைவராக பங்குபெற்று தங்கப்பதக்கம் பெற்றார்.
2012ஆம் ஆண்டு சீனாவின் ஹையானில் நடைபெற்ற 3வது ஆசிய கடற்கரை விளையாட்டுகளில் பங்குபெற்று, தங்கப்பதக்கம் பெற்றார்.
அனிதா பால்துரை 2013ஆம் ஆண்டு தோகாவில் நடைபெற்ற, முதல் மூன்று ஃபிபா ஆசிய கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்குபெற்று, தங்கப்பதக்கம் வென்றார்.
அனிதா, தேசிய விளையாட்டுகளில் 10 தங்கப்பதக்கத்தையும், 2 வெண்கலப்பதக்கத்தையும் வென்றுள்ளார்.
விருது:
2021ஆம் ஆண்டிற்கான இந்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் 'வாழ்நாள் சாதனையாளர்" விருது வழங்கப்பட்டுள்ளது.
English Summary
Indian basketball player Anitha paulthurai