ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி தொடரில் இந்திய அணி ஜப்பானை வீழ்த்தியது!
Indian team defeats Japan in Asian Champions Hockey Series
இந்திய அணி 5-1 என்ற கோல் கணக்கில் ஆடவருக்கான ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரில் ஜப்பான் அணியை வீழ்த்தி உள்ளது.
சீனாவின் ஹுலுன்புயர் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் சீனாவை இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் 3-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்துள்ளது. இதனை தொடர்ந்து நேற்று இந்திய அணி தனது 2-வது ஆட்டத்தில் ஜப்பான் அணியை எதிர்கொண்டு விளையாடி உள்ளது .
இதில் இந்திய அணி 5-1 என்ற கோல் கணக்கில் ஜப்பான் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.இந்த விளையாட்டில், இந்திய அணி சார்பில் சுக்ஜீத் சிங் இரண்டு கோல்களையும் அபிஷேக், சஞ்ஜய் மற்றும் உத்தம் சிங் ஆகியோர் தலா ஒரு கோலையும் அடித்துள்ளனர் . பின்னர், ஜப்பான் அணி தரப்பில் மட்சுமோட்டோ கசுமாசா 41-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.
இதனை அடுத்து நாளை இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் மலேசியா அணியுடன் மோத உள்ளது.
இந்நிலையில், இந்தத் தொடரில் 6 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வரும் நிலையில், ரவுண்ட் ராபின் லீக் முடிவில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிப் போட்டிக்கு முன்னேறும் எனவும், பின்னர் அரை இறுதி ஆட்டங்கள் வரும் செப் 16-ம் தேதியும், இறுதிப் போட்டி ஆட்டம் செப் 17-ம் தேதியும் நடைபெற உள்ளது.
English Summary
Indian team defeats Japan in Asian Champions Hockey Series