சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி நாளை அறிவிப்பு..? - Seithipunal
Seithipunal


சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 19ஆம் தேதி தொடங்கி மார்ச் 09ஆம் தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடக்கிறது. 

இந்த தொடருக்கான அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி குரூப் ஏ-வில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம் அணிகளும், குரூப் பி-யில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பிடித்துள்ளன.

ஆனால், இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகங்கள் தங்களது அணிகளை அறிவிக்கவில்லை. மற்ற கிரிக்கெட் நிர்வாகங்கள் தங்களது அணிகளை அறிவித்துள்ளன. பி.சி.சி.ஐ., சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அணியை அறிவிக்க ஐ.சி.சி.-யிடம் கூடுதல் கால அவகாசம் கேட்டிருந்தது.

இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடர் மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டி20, ஒருநாள் தொடர்களுக்கான இந்திய அணி நாளை அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. 

தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கர் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா இணைந்து நாளை பிற்பகல் 12.30 மணி அளவில் செய்தியாளர் சந்திப்பில் இந்திய அணியை அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த செய்தியாளர் சந்திப்பில் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கலந்து கொள்ள மாட்டார் எனவும் கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indian team to be announced tomorrow for the Champions Trophy series


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->