#AAC2023Bangkok || கலப்பு 400 மீ தொடர் ஓட்டத்தில் தங்கப்பதக்கத்தை தட்டி தூக்கிய இந்திய அணி.!! - Seithipunal
Seithipunal


தாய்லாந்து தலைநகர் பாங்காக் நகரில் 25வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் கடந்த ஜூலை 10ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் 4வது நாளான இன்று வரை 29 பதக்கங்களை வென்று ஜப்பான் முதலிடத்தை தக்க வைத்துள்ளது.

இந்த நிலையில் இன்று நடைபெற்ற 400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில் இந்திய அணி தங்கப்பதக்கம் வென்றுள்ளது.

இந்திய அணி தரப்பில் ராஜேஷ் ரமேஷ், ஐஸ்வர்யா கைலாஷ் மிஸ்ரா, அமோஜ் ஜேக்கப், சுபா வெங்கடேசன் ஆகியோர் 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் பங்கேற்றனர். அமோஜ், ஐஸ்வர்யா, ராஜேஷ் மற்றும் சுபா ஆகியோரின் 4x400 மீ தொடர் போட்ட அணி புதிய தேசிய அளவில் 3:14.70 வினாடிகளுக்கு ஓடி தங்கப்பதக்கத்தை வென்றது.

இறுதி ஓட்டத்தில் இந்திய அணியில் இடம் பெற்றிருந்த சுபா வெங்கடேசன் சிறப்பாக ஓடி இந்திய அணிக்கு தங்கப் பதக்கத்தை பெற்று தந்தார். ஆசிய தடகள சேம்பியன்ஷிப் தொடரில் இந்தியா 6 தங்கம், 4 வெள்ளி, 4 வெண்கலம் உட்பட 14 பதக்கங்களுடன் 3வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indian team won gold in mixed 400m relay


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->