இந்தியா - ஆஸ்திரேலியா மகளிர் 2வது டி20 போட்டி.. சூப்பர் ஓவரில் இந்திய மகளிர் அணி த்ரில் வெற்றி.! - Seithipunal
Seithipunal


ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் சூப்பர் ஓவரில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றுள்ளது.

இந்தியாவில்  சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய மகளிர் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்த நிலையில் நேற்று இரவு 7 மணிக்கு இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி மும்பை மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பௌலிங் தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 20 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் மட்டுமே இழந்து 187 ரன்களை எடுத்துள்ளது. அந்த அணியில் விளையாடிய பெத் மூனே 84 ரன்களுடனும், தஹிலா மெக்ராத் 70 ரன்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

அதனைத் தொடர்ந்து 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய மகளிர் அணி 19 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து கடைசி ஓவரில் 14 ரன்கள் தேவைப்பட்டது. இதில் கடைசி பந்தில் 5 தேவைப்பட்ட நிலையில் பவுண்டரி அடித்தில் போட்டி டிரா ஆனது.

இதனையடுத்து சூப்பர் ஓவர் போட்டியாக மாற்றப்பட்டது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 6 பந்துகளில் 20 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 21 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய மகளிர் அணி 16 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி த்ரில் வெற்றி பெற்றது.

இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1-1 கணக்கில் சமநிலையில் உள்ளது. அதனைத் தொடர்ந்து 3வது டி20 போட்டி நாளை மறுநாள் (டிசம்பர் 14ம் தேதி) இரவு 7 மணிக்கு நடைபெற உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indian women's beat by super over against australia womens


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->