இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான மகளிர் 2வது டி20 போட்டி.. டாஸ் வென்ற இந்திய அணி பௌலிங் தேர்வு.!
INDW vs AUSW 2nd T20 match India bowling
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய மகளிர் அணி பௌலிங் தேர்வு செய்துள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய மகளிர் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்த நிலையில் இன்று இரவு 7 மணிக்கு இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி மும்பை மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பௌலிங் தேர்வு செய்துள்ளது.
அணி விவரம்
ஆஸ்திரேலியா மகளிர் அணி :
பெத் மூனி, அலிசா ஹீலி(w/c), தஹ்லியா மெக்ராத், ஆஷ்லீ கார்ட்னர், எல்லிஸ் பெர்ரி, ஃபோப் லிட்ச்ஃபீல்ட், அனாபெல் சதர்லேண்ட், ஹீதர் கிரஹாம், அலனா கிங், கிம் கார்த், மேகன் ஷட்.
இந்திய மகளிர் அணி:
ஷஃபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்மன்ப்ரீத் கவுர்(c), தேவிகா வைத்யா, ரிச்சா கோஷ்(w), தீப்தி சர்மா, ராதா யாதவ், அஞ்சலி சர்வானி, மேக்னா சிங், ரேணுகா தாக்கூர் சிங்.
English Summary
INDW vs AUSW 2nd T20 match India bowling