ஐபிஎல் தொடரில் இருந்து ஹர்டிக் பாண்டியா விலகல்? கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சி.!! - Seithipunal
Seithipunal


ஒருநாள் உலகக் கோப்பை தொடரின் போது இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியாவுக்கு ஏற்பட்ட கணுக்கால் காயம் காரணமாக  உலகக் கோப்பை அணியில் இருந்து விலகினார். அதை தொடர்ந்து நடைபெற்ற ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு எதிரான தொடர்களிலும் ஹார்திக் பாண்டியா விளையாடவில்லை. இந்நிலையில் வரும் ஜனவரி 11 முதல் 17 வரை ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் பங்கேற்க மாட்டார் என தெரிய வந்துள்ளது .

காயம் சரியாக இன்னும் சில மாதங்கள் ஆகும் என்பதால் வரும் ஐபிஎல் தொடரிலும் ஹார்திக் பங்கேற்க மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ஹார்திக் பாண்டியாவை டிரேடிங் முறையில் ஏலத்துக்கு முன்னதாகவே மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியது. அதனை தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹார்திக் பாண்டியா நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் ஹார்திக் பாண்டியா ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகும் பட்சத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா செயல்படுவாரா? அல்லது சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்படுவாரா? என்ற சந்தேகம் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளடித்து.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

info Hardik Pandya withdraws from IPL series


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->