இன்டர்காண்டினென்டல் கால்பந்து ஆட்டம் : இன்று இந்தியா - சிரியா அணிகள் மோதல்!
Intercontinental football match india syria clash today
தெலுங்கானாவில் நடைபெற்று வரும் இன்டர்காண்டினென்டல் கால்பந்து தொடரில், இந்தியா - சிரியா அணிகள் இன்று இரவு 7.30 மணிக்கு மோதுகிறது.
தெலுங்கானா மாநிலம், கச்சிபவுலியில் இன்டர்காண்டினென்டல் கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது.
இந்த தொடரில் இந்தியா, சிரியா மற்றும் மொரீசியஸ் நாட்டு அணிகள் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த ஆட்டத்தில் இந்திய அணியானது, மொரீசியஸ் அணிக்கு எதிரான தனது முதல் ஆட்டத்தில் 0-0 என டிராவை சந்தித்தது.
பின்னர் மொரீசியஸ் - சிரியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற 2வது லீக் ஆட்டத்தில் சிரியா 2-0 என்ற கோல் கணக்கில் மொரீசியஸை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்நிலையில், இன்டர்காண்டினென்டல் கால்பந்து தொடரில் இன்று நடைபெறும் 3வது லீக் ஆட்டத்தில் இந்தியா - சிரியா அணிகள் மோத உள்ளன.
இந்திய நேரப்படி ஆட்டம் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. ஏற்கனவே இந்திய அணியானது, மொரீசியஸ் அணிக்கு எதிரான தனது முதல் ஆட்டத்தில் 0-0 என டிராவை சந்தித்த நிலையில், தற்போது சிரியா அணியுடன் மோத உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Intercontinental football match india syria clash today