#IPL2023 : ஹாட்ரிக் வெற்றியை பெறப்போவது யார்? மும்பை - ஹைதராபாத் அணிகள் இன்று மோதல்.!
IPL 2023 25th match SRH vs MI today
16வது ஐபிஎல் சீசன் போட்டிகள் கடந்த மார்ச் 31ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி, ஏப்ரல் 28 வரை நடைபெற உள்ளது. இந்த சீசனில் மொத்தம் 74 போட்டிகள் நடைபெற உள்ளது. தற்போது லீக் சுற்றுப் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை 4 போட்டியில் விளையாடியுள்ள நிலையில் 2 போட்டியில் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது.
அதேபோல் இந்த சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இதுவரை 4 போட்டியில் விளையாடியுள்ள நிலையில் 2 போட்டியில் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது.
இந்த நிலையில் இன்று இரவு 7.30 மணிக்கு ஹைதராபாத் மைதானத்தில் நடைபெறும் 25வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.
இந்த சீசனில் தொடக்கத்தில் இரு அணிகளும் முதல் 2 போட்டிகளில் தோல்வி அடைந்தது. அதன் பின்னர் நடைபெற்ற 2 போட்டிகளில் வெற்றி பெற்று வலுவாக உள்ளது.
தற்போது மூன்றாவது தொடர் வெற்றியை பெற இரு அணிகளும் போராடும் என்பதால் இன்றைய போட்டி விறுவிறுப்பாக அமையும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை நேருக்கு நேர்
இதுவரை இவ்விரு அணிகளும் 19 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி 10 போட்டிகளிலும், ஹைதராபாத் அணி 9 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
English Summary
IPL 2023 25th match SRH vs MI today