#IPL2023 : முதல் ஐபிஎல் விக்கெட்டை வீழ்த்திய சச்சின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர்.. மும்பை வெற்றி.!
IPL 2023 Arjun Tendulkar take 1st wicket against Hyderabad
16வது ஐபிஎல் சீசன் போட்டிகள் கடந்த மார்ச் 31ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி, ஏப்ரல் 28 வரை நடைபெற உள்ளது. இந்த சீசனில் மொத்தம் 74 போட்டிகள் நடைபெற உள்ளது. தற்போது லீக் சுற்றுப் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு 7.30 மணிக்கு ஹைதராபாத் மைதானத்தில் நடைபெறும் 25வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின.
இதில், முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்தது. அதனைத் தொடர்ந்து 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணி வெற்றிக்கு கடைசி ஓவரில் 20 ரன்கள் தேவைப்பட்டது.
இதில் மும்பை இந்தியன்ஸ் அணியில் அர்ஜூன் டெண்டுல்கர் பந்து வீசினார். ஹைதராபாத் அணியில் அப்துல் சமாத்தும்-புவனேஷ்வர் குமாரும் களத்தில் இருந்தனர். இதில், முதல் பந்தில் ரன் ஏதும் இல்லாத நிலையில், 2-வது பந்தில் சமத் ரன் அவுட்டானார்.
அடுத்த 2 பந்துகளில் 4 ரன்கள் எடுத்த நிலையில், 5வது பந்தை எதிர்கொண்ட புவனேஷ்வர் குமார் ரோஹித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் அர்ஜுன் டெண்டுல்கர் தனது முதல் விக்கெட்டை வீழ்த்தியுள்ளார்.
இறுதியாக ஹைதராபாத் அணி ஹைதராபாத் அணி 19.5 ஓவரில் 178 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் சிறப்பாக பந்து வீசிய அர்ஜுன் டெண்டுல்கர் 2.5 ஓவர்கள் வீசி 18 ரன்கள் மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட் எடுத்துள்ளார்.
English Summary
IPL 2023 Arjun Tendulkar take 1st wicket against Hyderabad