#IPL2023 : மும்பையை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது குஜராத் அணி.!
IPL 2023 qualifier 2 GT won against MI and reach Final
நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அந்த வகையில் லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில், ப்ளே ஆப் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய 4 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.
அந்த வகையில் கடந்த 24ம் தேதி நடைபெற்ற குவாலிஃபயர் 1 போட்டியில் குஜராத்தை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அதைத்தொடர்ந்து மே 27ம் தேதி நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் லக்னோவை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி குவாலிஃபயர் 2 போட்டிக்கு முன்னேறியது.
இந்த நிலையில் நேற்று இரவு 7.30 மணிக்கு அகமதாபாத் மைதானத்தில் நடைபெறும் குவாலிஃபயர் 2 போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பௌலிங் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணியின் சுப்மன் கில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சை மைதானத்தின் நாலாபுரமும் சிதறடித்தார். இறுதியாக குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 233 ரன்கள் குவித்தது. இதில் குஜராத் அணியில் சிறப்பாக விளையாடிய சுப்மன் கில் 60 பந்துகளில் (7 பவுண்டரி மற்றும் 10 சிக்ஸர்) 129 ரன்கள் குவித்தார்.
அதனைத் தொடர்ந்து 234 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் ஆரம்பம் முதலே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதியாக மும்பை இந்தியன்ஸ் அணி 18.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 171 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதன் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி இறுப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
அதன்படி, நாளை இரவு 7.30 மணிக்கு அகமதாபாத் மைதானத்தில் நடைபெறும் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.
English Summary
IPL 2023 qualifier 2 GT won against MI and reach Final