தோனி மீது தவறில்லை - கோலி & பெங்களூர் அணி செய்த தவறே காரணம்! - Seithipunal
Seithipunal


கடந்த 18ம் தேதி ஐபிஎல் தொடரின் 68 லீக் ஆட்டத்தில் சென்னை அணியை வீழ்த்திய பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது. தற்போதுவரை இந்த ஆட்டம் பல்வேறு சர்ச்சைகளையும், விமர்சனங்களையும் ஏற்படுத்தி உள்ளது. 

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டில் செய்த பெங்களூர் அணி, 20 ஓவர்களில் 218 ரன்களை எடுத்தது. 201 ரன்கள் எடுத்தாலே பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லலாம் என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 191 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.

இதன் காரணமாக பெங்களூர் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது. இந்த ஆட்டத்தின் இறுதியில் சென்னை அணியின் விக்கெட் கீப்பர், முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, ஆர்சிபி வீரர்களுக்கு கைகுலுக்காமல் சென்ற காணொளி ரசிகர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

மகேந்திர சிங் தோனி இப்படி செய்திருக்கக் கூடாது என்று பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் மகேந்திர சிங் தோனி மீது தவறு இல்லை என்பதும், பெங்களூர் அணி வீரர்கள் மீது தான் தவறு என்றும் கிரிக்கெட் வர்ணனையாளர் வாகன் தெரிவித்துள்ளார்.

ஆட்டத்தின் இறுதியில் மகேந்திர சிங் தோனி வெற்றி பெற்ற ஆர்சிபி வீரர்களுக்கு கை கொடுப்பதற்காக மைதானத்தில் காத்துக் கொண்டிருந்ததாகவும், நீண்ட நேரம் ஆகியும் ஆர்சிபி அணியினர் கை கொடுக்க வராமல், அவர்கள் வென்ற சந்தோஷத்தில் கொண்டாடியிருந்ததாகவும், அதனாலையே மகேந்திர சிங் தோனி கை கொடுக்காமல் மைதானத்தை விட்டு வெளியேறியதாகவும் தெரியவந்துள்ளது. 

கிரிக்கெட் வர்ணனையாளர் வாகன் இதுகுறித்து தெரிவிக்கையில், "தோனியின் கடைசி போட்டியாக இது இருக்கலாம் என்ற சூழ்நிலையில், அவர் அங்கு காத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் பெங்களூர் அணி வீரர்கள் கை கொடுக்க வரவில்லை. 

அவருக்கு கை கொடுத்துவிட்டு பின்னர் பெங்களூர் அணி வீரர்கள் அவர்களின் கொண்டாட்டத்தை தொடர்ந்து இருக்கலாம். நிச்சயமாக தோனிக்கு கை கொடுக்க வேண்டும் என்ற கண்ணியம் நமக்கு இல்லாமல் போய்விட்டதே என்று பெங்களூர் அணி வீரர்கள் வருந்துவார்கள்" என்றும் வாகன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IPL 2024 CSK RCB MS Dhoni issue


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->