மல்லுக்கட்டி சிஎஸ்கே வாங்கிய குட்டி ரெய்னா! யார் இந்த சமீர் ரிஸ்வி?! - Seithipunal
Seithipunal


2024-ம் ஆண்டுக்கான ஐபிஎல் வீரர்கள் மினி ஏலம் துபாயில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் ஆஸ்திரேலியா வீரர் மிட்செல் ஸ்டார்க்-யை இதுவரை இல்லாத அளவுக்கு அதிக தொகைக்கு ரூ.24.75 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலம் எடுத்து.

மேலும், ரூ.20 லட்சம் அடிப்படையில் விலையில் அறிமுகமான சில இளம் இந்திய வீரர்களை சென்னை உள்ளிட்ட முன்னணி அணிகள் போட்டிபோட்டு கொண்டு கோடிகளை குவித்து வாங்க ஆர்வம் காட்டின. 

ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக ரூ.3.6 கோடிக்கு பழங்குடியினத்தை சேர்ந்த இந்திய இளம் வீரர் ராபின் மின்ஸ் குஜராத் அணியால் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் ஆட்டங்களில் ஆடப்போகும் முதல் பழங்குடியின வீரர் என்ற பெருமையையும் ராபின் மின்ஸ் பெற்றுள்ளார்.

இதேபோல் இந்தியாவின் இளம் வீரர் சமீர் ரிஸ்வி-யை 8.4 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி ஏலம் எடுத்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. 

20 லட்சம் ருபாய் என்ற ஆரம்ப விலையில் ஏலம்விடப்பட்ட சமீர் ரிஸ்வியை, சென்னை, டெல்லி மற்றும் குஜராத் அணிகள் கைப்பற்ற கடுமையாக போட்டிபோட்டு இறுதியில் சென்னை அணி 8.4 கோடிக்கு ஏலம் எடுத்து.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியே ஒரு வீரரை இந்த அளவுக்கு போராடி ஏலத்தில் எடுத்திருக்கிறது என்றால்? அந்த அளவுக்கு சமீர் ரிஸ்வி யார்? அவரின் திறமை என்ன? என்று ரசிகர்கள் தேட ஆரம்பித்துள்ளனர்.

இந்திய அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், முன்னாள் வீரர்கள் சுரேஷ் ரெய்னா, அபினவ் முகுந்த் ஆகியோர் ஏற்கனவே சமீர் ரிஸ்வி குறித்து தெரிவிக்கையில், ஒரு பேட்ஸ்மேனாக சமீர் ரிஸ்வி வித்தியாசமான அணுகுமுறை கொண்டவர். ஸ்பின்னர்களுக்கு எதிராக விளையாடும் அவரின் யுக்தியை வைத்து அவரை வலது கை ரெய்னா என்றார்கள். பல அணிகளும் இவரை ஏலத்தில் எடுக்க போட்டி போடலாம்" என்று ஏலத்துக்கு முன்பே கூறியிருந்தனர்.

ஆம், அவர்கள் சொன்னது உண்மை தான் எனும் அளவிற்கு சமீர் ரிஸ்வி புகழ் கிரிக்கெட் வட்டாரத்தில் பரவியுள்ளது.அதனால் தான் இவ்வளவு தொகை கொடுத்து சென்னை அணியால் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார் சமீர் ரிஸ்வி. 

உத்தரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த சமீர் ரிஸ்வி, அம்மாநில லீக் ஆட்டங்கள் மூலமாக கிரிக்கெட் உலகில் அறிமுகமானவர்.

தற்போது கான்பூர் சூப்பர் ஸ்டார்ஸ் அணி கேப்டனாகவும் இருக்கும் சமீர் ரிஸ்வி, 9 இன்னிங்ஸ்களில் 455 ரன்கள் குவித்து 189 ஸ்ட்ரைக் ரேட் வைத்திருக்கிறார்.

அதிலும் ஒரு ஆட்டத்தில் 59 பந்துகளில் 122 ரன்களை அடித்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ள சமீர் ரிஸ்வி, அந்த சீசனில் மட்டும் 35 பவுண்டரிகளையும், 38 சிக்ஸர்களையும் விளாசி உள்ளார்.

மேலும், ஸ்பின்னர்களுக்கு எதிராக இவர் விளையாடும் விதம் கிரிக்கெட் வட்டாரத்தை இவரின் பக்கம் ஈர்த்துள்ளது. சையத் முஷ்தாக் அலி தொடரில் 18 சிக்ஸர்களை அடித்துள்ள சமீர் ரிஸ்வி, அம்மாநில அளவிலான கிரிக்கெட் தொடர்களில் அதிக சிக்ஸர்களை விளாசிய வீரர் என்று பெருமையையும் பெற்றுள்ளார்.

சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியில் சிவம் துபே இல்லாத குறையை இவர் நிவர்த்தி செய்வார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IPL 2024 CSK SAMEER RIZVI


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->