'ஐபிஎல் 2024' மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டனான ஹர்திக் பாண்டியா! ரசிகர்கள் அதிர்ச்சி! - Seithipunal
Seithipunal


2024 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் ரோகித் சர்மா செயல்பட்டு வந்தார். 

இவர் தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 முறை வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை பெற்றது. இந்நிலையில் தற்போது ரோகித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மும்பை இந்தியன்ஸ் அணியில் கடந்த 2015 முதல் 2021 வரை அங்கம் வகித்த ஹர்திக் பாண்டியா கடந்த 2022ஆம் ஆண்டு குஜராத் டைட்டன்ஸ் அணியில் இணைந்தார். 

அங்கு அவருக்கு கேப்டன் பதவி அளிக்கப்பட்ட தொடரில் ஹர்திக் பாண்டியா குஜராத் அணிக்கு ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்தார். 

மேலும் இறுதிப் போட்டி வரை குஜராத் அணியை கொண்டு சென்றார். இதனைத் தொடர்ந்து மீண்டும் கடந்த நவம்பர் மாதம் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்பிய ஹர்திக் பாண்டியாவுக்கு தற்போது கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IPL 2024 Mumbai Indians captain Hardik Pandya


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->