முதல் வெற்றியை பதிவு செய்த மும்பை இந்தியன்ஸ்! - Seithipunal
Seithipunal


ஐபிஎல் 2024 தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் மும்பை மற்றும் டெல்லி அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா- இஷான் கிஷன் ஜோடி, அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். 

விக்கெட் இழப்பில்லாமல் இந்த ஜோடி 80 ரன்கள் சேர்த்த போது, ரோஹித் சர்மா 49 ரங்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து சூரியகுமார் யாதவ் டக்-அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார்.

ஆட்டத்தின் இறுதியில் டிம் டேவிட், ஷெப்பர்ட் ஜோடி டெல்லி அணியின் பந்து வீச்சை கிழித்து எடுத்தனர். கடைசி ஓவரில் 32 ரன்கள் குவித்தார் ஷெப்பர்ட். இறுதியில் மும்பை அணி 20 ஓவர் முடிவில் 235 ரன்கள் எடுத்தது. 

இதனையடுத்து களமிறங்கிய டெல்லி அணியின் தொடக்க வீரர் வார்னர் 10 ரன்னில் அவுட் ஆக, ப்ரித்வி ஷா -போரல் ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தது. 

சீரிய இடைவெளியில் விக்கெட்கள் சரிய, இறுதியில் டெல்லி அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் எடுத்தது. இதனால் மும்பை 29 ரன்கள் வித்தியாசத்தில் முதல் வெற்றியை பதிவு செய்தது. 

கடைசி வரை போராடிய டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 71 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். மும்பை பந்து வீச்சை பொறுத்தவரை ஜெரால்ட் கோட்ஸி 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IPL 2024 Mumbai Indians 1st victory


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->