#IPL2023 : டக் அவுட் ஆன பட்லருக்கு 10 சதவீதம் அபராதம்.. காரணம் என்ன.? - Seithipunal
Seithipunal


16வது ஐபிஎல் சீசன் போட்டிகள் கடந்த மார்ச் 31ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி, மே 28 வரை நடைபெற உள்ளது. இந்த சீசனில் மொத்தம் 74 போட்டிகள் நடைபெற உள்ளது. தற்போது லீக் சுற்றுப் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு 7:30 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற 56வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் பௌலிங் தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் அணியில் சிறப்பாக பந்து வீசிய சஹால் 4 ஓவர்களில் 25 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார்.

அதனைத் தொடர்ந்து 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல் அணி 13.1 ஓவர்களில் ஒரே ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 151 ரன்கள் குவித்தது. இதன் மூலம் ராஜஸ்தான் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

ராஜஸ்தான் அணியில் அதிரடியாக விளையாடிய ஜெய்ஸ்வால் 47 பந்துகளில் (13பவுண்டரி & 5 சிக்ஸர்) 98 ரன்களும், சஞ்சு சாம்சங் 29 பந்துகளில் (2பவுண்டரி & 5 சிக்ஸர்) 48 ரன்களும் குவித்தனர். இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 12 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது

இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜாஸ் பட்லருக்கு 10 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் நேற்று ரன்கள் எதுவும் எடுக்காத நிலையில், பட்லர் ரன் அவுட்டாகி வெளியேறினார். 

இதனையடுத்து ரன்கள் ஏதும் எடுக்காத நிலையில் ஆக்ரோஷமாக பெவிலியன் திரும்பிய பட்லர்  பௌண்டரி எல்லையை தனது பேட்டால் அடித்து விட்டு சென்றார். இது ஐபிஎல் நடத்தை விதிமுறைப்படி குற்றமாகும். இதனையடுத்து ராஜஸ்தான் வீரர் ஜாஸ் பட்லருக்கு போட்டி கட்டணத்திலிருந்து 10 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IPL committee fined 10% to butler against KKR match


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->