ஐபிஎல் வரலாற்றில் மற்றொரு மைல்கல்..7வது முறையாக 250க்கு மேல் ரன்கள்!!
Ipl history highest sixs
நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. அப்போட்டியில் இரு அணிகளும் 250 ரண்களுக்கு மேல் அடித்து ரசிகர்களின் மலைக்க வைத்தன. இந்த சீசன் ஐபிஎல் தொடரில் 7வது முறையாக 250 ரன்களுக்கு மேல் குவிக்கப்பட்டுள்ளன. கொல்கத்தா அணி டெல்லி அணிக்கு எதிராக 272 ரன்கள் எடுத்தது. ஹைதராபாத் 3 முறை பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் 1 முறையும் 250 ரன்களை கடந்துள்ளது.
இந்த சீசனுக்கு முந்தைய சீசனில் மொத்தமே இரண்டு தடவை தான் 250 ரன்கள் மேல் எடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. நேற்று நடந்த ஆட்டத்தில் கொல்கத்தா அணி தரப்பில் 18 சிக்ஸர்கள் பஞ்சாப் அணி சார்பில் 24 சிஸ்சர்கள் என மொத்தம் 42 சிஸ்சர்கள். ஐபில் வரலாற்றில் அடிக்கப்பட்ட அதிகப்பட்ச சிக்ஸர்களின் எண்ணிக்கை இதுதான்.