20 லட்சத்தில் இருந்து, 10.75 கோடி ரூபாய்க்கு ஏலம் போன இந்திய வீரர்.!  - Seithipunal
Seithipunal


இன்று பெங்களூருவில் 15வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் தொடங்கியது. இன்றைய ஐபிஎல் மெகா ஏலத்தில் 161 வீரர்கள்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது. இதுவரை இந்த ஏலத்தில்,

* குஜராத் - முகமது ஷமி, ஜேசன் ராய் 
* லக்னோ - குயின்டன் டி காக், மனிஷ் பாண்டே, தீபக் ஹூடா, ஜேசன் ஹோல்டர் 
* பெங்களூர் - ஹர்ஷல் பட்டேல், பாப் டூ பிளஸ்சி, வனிந்து ஹசரங்கா  
* கொல்கத்தா - ஸ்ரேயாஸ் ஐயர், நிதீஷ் ராணா, பேட் கம்மின்ஸ்
* சென்னை சூப்பர் - டிவைன் பிராவோ, ராபின் உத்தப்பா, 
* ராஜஸ்தான் - ட்ரெண்ட் போல்ட், ரவிச்சந்திரன் அஸ்வின், தேவ்தத் படிக்கல், ஷிம்ரன் ஹெட்மேயர், 
* டெல்லி - டேவிட் வார்னர்
* பஞ்சாப் - ஷிகர் தவான், ககிஸோ ரபாடா எடுக்கப்பட்டுள்ளனர்.
* ஹைதராபாத் - வாஷிங்டன் சுந்தர் 

ஐபிஎல் மெகா ஏலத்தில் இந்திய வீரர் க்ருனால் பாண்டியாவை 8.25 ரூபாய்க்கு லக்னோ அணி ஏலம் எடுத்துள்ளது.

இந்நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இன்ற ஏலத்தில் இதுவரை ஹர்ஷல் பட்டேல், பாப் டூ பிளஸ்சி, வனிந்து ஹசரங்கா ஆகியோரை ஏலம் எடுத்துள்ளது. 

இதில், ஹர்ஷல் பட்டேல் 10.75 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். முன்னதாக அவர் கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் வெறும் 40 லட்சம் ரூபாய்க்கு தான் ஏலம் போனார். பின்னர் 2018 மற்றும் 2021-ல் தலா 20 லட்சம் ரூபாய்க்கு தான் ஏலம் போனார்.

ஆனால், இந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் ஹர்ஷல் பட்டேலை 10.75 கோடி ரூபாய்க்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஏலம் எடுத்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IPLAUCTION 2022 Harshal Patel 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->