ஐசிசி டி20 உலகக்கோப்பை பயிற்சி போட்டியில் இருந்து இங்கிலாந்து கேப்டன் ஜாஸ் பட்லர் விலகல்..!! - Seithipunal
Seithipunal


ஐசிசி டி20 உலகக்கோப்பை போட்டித்தொடர் வரும் ஜூன் 2ம் தேதி அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் தொடங்கவுள்ளது. இத்தொடரில் பங்குபெறும் இந்திய அணியினர் நியூயார்க் கிளம்பி சென்றுள்ளனர். இதையடுத்து போட்டி தொடங்குவதற்கு முன்பு ஒவ்வொரு அணிக்கும் பயிற்சி ஆட்டம் நடைபெறும்.

இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே பயிற்சி போட்டி ஜூன் 1ம் தேதி நடைபெற உள்ளது. அதேபோல இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான பயிற்சி போட்டி இன்று நடைபெற உள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் பயிற்சி போட்டியில் இருந்து விலகுவதாக தெரிய வந்துள்ளது.

ஜாஸ் பட்லரின் மனைவி லூயிஸ் மூன்றாவது முறையாக கர்ப்பமாக இருந்துள்ளார். இந்நிலையில் தற்போது அவருக்கு குழந்தை பிறந்துள்ளது. எனவே தான் ஜாஸ் பட்லர் பாகிஸ்தானுடனான பயிற்சி ஆட்டத்தில் இருந்து விலகியுள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட்வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் மற்றும் லூயிஸ் தம்பதிக்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் சார்பில் வாழ்த்துக்களையும், மகிழ்ச்சியையும் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jaas Butler deviated from ICC T20 Practice Match


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->