டெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்த ஜோ ரூட்.!
Joe root equalise Sachin Tendulkar Test record
இங்கிலாந்து அணி சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரில் இதுவரை 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில், 2-1 கணக்கில் ஆஸ்திரேலியா அணி முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையேயான 5வது டெஸ்ட் போட்டி கடந்த 27ஆம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 283 ரண்களும், ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸில் 295 ரன்கள் எடுத்தன.
அதனைத் தொடர்ந்து 12 ரன்கள் பின்னிலையுடன் இரண்டாவது இன்னிசை தொடங்கிய இங்கிலாந்து அணி நேற்றைய மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 389 ரன்கள் குவித்துள்ளது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 377 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
இந்த போட்டியில் இங்கிலாந்து அணியின் முன்னணி ஆட்டக்காரர் ஜோ ரூட் முதல் இன்னிங்ஸில் 5 ரன்களும், 2வது இன்னிங்ஸில் 91 ரன்கள் எடுத்தார். அவர் இந்த தொடரில் 5 போட்டிகளில் விளையாடி 412 ரன்கள் குவித்துள்ளார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்துள்ளார்.
அதன்படி டெஸ்ட் தொடரில் அதிக முறை 300 ரன்களுக்கு மேல் அடித்த வீரர் என்ற சாதனையை கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்துள்ளார்.
டெஸ்ட் தொடரில் அதிக முறை 300க்கு மேல் ரன்கள் அடித்த வீரர்கள்
சச்சின் டெண்டுல்கர் (இந்தியா) - 19 முறை
ஜோ ரூட் (இங்கிலாந்து) - 19 முறை
ராகுல் டிராவிட் (இந்தியா) - 18 முறை
பிரைன் லாரா (வெஸ்ட் இண்டீஸ்) - 18 முறை
ரிக்கி பாண்டிங் (ஆஸ்திரேலியா) - 17 முறை
அலைஸ்டர் குக் (இங்கிலாந்து) - 17 முறை
English Summary
Joe root equalise Sachin Tendulkar Test record