IPL2022 : ஐபிஎல் கிரிக்கெட்டில் விராட் கோலி சாதனையை முறியடித்த ஜாஸ் பட்லர்.!
Jos butler broke Virat Kohli most boundary in single IPL season
நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் இரண்டாவது அணி எது என்பதை நிர்ணயிக்கும் 2வது தகுதி சுற்று போட்டி நேற்று நடைபெற்றது. இதில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பௌலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்தது.
அதை தொடர்ந்து 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 18.1 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அந்த அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அதிரடியாக விளையாடிய ஜாஸ் பட்லர் 60 பந்துகளில் 10 பவுண்டரிகள், 6 சிக்சர்களுடன் 106 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதன் மூலம், ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஒரு சீசனில் அதிக பவுண்டரிகள் விளாசி விராட் கோலியின் சாதனையை முறியடித்துள்ளார் ஜாஸ் பட்லர். நடப்பு சீசனில் 123 பவுண்டரிகளை ( 4S-78 / 6S-45 ) அடித்துள்ளார். இதற்கு முன்னதாக 2016ல் விராட் கோலி 121 பவுண்டரிகளை (4S-83 / 6S-38 ) அடித்துள்ளார்.
English Summary
Jos butler broke Virat Kohli most boundary in single IPL season