மாவட்ட அளவிலான ஹாக்கி லீக் போட்டிகளில் பங்கேற்க காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அழைப்பு.! - Seithipunal
Seithipunal


மாவட்ட அளவிலான ஹாக்கி லீக் போட்டியில் பள்ளி, கல்லுாரி, தனியார் நிறுவன ஊழியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கலாம் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு துறை சார்பாக, ஆண்கள் மட்டும் பங்கேற்கும் மாவட்ட அளவிலான ஹாக்கி லீக் போட்டி, நாளை காலை 9:00 மணிக்கு, காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நசைபெற உள்ளது என தெரிவித்துள்ளார்.

இப்போட்டிக்கு வயது வரம்பு இல்லை என்றும், போட்டிகள் அனைத்தும் லீக் சுற்று முறையில் நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இதில் பங்கேற்க விரும்பும் அணிகள், நாளை மாலை 5:00 மணிக்குள்ளாக காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

மாவட்ட அளவில் வெற்றி பெறும் அணிகள், மண்டல அளவிலான போட்டிகளில் பங்கேற்க தகுதி பெறும் என்றும், வெற்றி பெறும் அணிகளுக்கு பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

எனவே, காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள அனைத்துப் பள்ளி, கல்லுாரி, தனியார் நிறுவனங்களில் பயிலும், பணிபுரியும் வீரர்கள் பங்கேற்று, பயன்பெற வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kanchipuram District collector invites youths to participate in hockey league


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->